About Us

வானலையில் தாளம் சர்வதேச வானொலி

about us

Thaalam FM

வானலையில் தாளம் சர்வதேச வானொலி

இலங்கை தமிழ் வானெலித்துறையில் ஒரு புதிய பரிணாமமான தாளம் FM சர்வதேச ஒலிபரப்பினை ஆரம்பித்தது ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி 2003 ஆம் ஆண்டு.
இலங்கையில் இருந்து செய்மதியூடாக Hotbird 6 10971 mhz அலைவரிசையில் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இணையத்தளத்தில் www.thaalam.fm www.wtrfm.com உலகம் முழுவதும் ஒலிபரப்பாகி வருகிறது. அதுமாத்திரமின்றி இலங்கையில் 93.6 கஅ அலைவரிசையில் இரவு 9.30 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணிவரைக்கும் இரவில் விழித்திருங்கள் எனும் தொணிப்பொருளில் ஒலிபரப்பாகின்றது.

தாளம் சர்வதேச வானொலி 12 ஆண்டுகளை பல சாதனைகளோடு நிறைவு செய்து உயிரிலும் மேலான நேயநெஞ்சங்களின் ஆதரவோடு தனது சேவையை தொடர்கிறது.
ஒரு ஜனரங்சக வானொலியாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமின்றி பல்வேறு துறைசார் வழிகளில் தரமான நிகழ்ச்சிகளை படைத்து எதிர்கால உலகிற்கு முகவரி கொடுக்கின்றது. புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளின் மத்தியில் தனித்துவம் கொண்ட குடும்ப வானொலியாக உருவெடுத்துள்ளது.

இயந்திரத் தமிழுக்கிடையில் இயல்பான தமிழ் மூலம் இணையற்ற இதயங்களை சர்வதேச ரீதியில் தன்வசப்படுத்திய பெருமை தாளம் நிகழ்த்திய ஒரு மாபெரும் புரட்சியாகும்.
தாளம் FM ஓர் உள்ளக பார்வை

தாளம் வானெலி தனது முன்னோக்கிய ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் படைக்கப்பட்ட சாதனைகளே ஏராளம். இந்நிலையில் தன்னகத்தே நிகழ்ச்சிப்பிரிவு செய்திப்பிரிவு திட்டமிடல் விரிவாக்கற்பிரிவு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு என வெவ்வேறு பிரிவுகளினதும் கூட்டுச் செயற்பாடே தாளத்தின் வெற்றிக்கு கரம்கோர்க்கிறது.
முற்றுமுழுதாக இளைஞா் குழாமின் இயக்கத்தில் இயங்கும் தாளம் கைவிரல் ஒற்றுமையில் அன்று முதல் இன்று வரை உலகையே வலம்வருகிறது.

நிகழ்ச்சிப்பிரிவு

காலமாற்றத்திற்கு ஏற்றவாறு கலக்கலான பல நிகழ்ச்சிகளை அமைக்கும் தன்மை இளம் துடிப்பான படைப்பாளிகளின் திறனைக்காட்டி நிற்கிறது. இந்த வகையில் வெளிக்கள நிகழ்ச்சி திட்டமிடலிலும் பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்வதாலும் இன்றுவரை எண்ணற்ற அபிமான நேயநெஞ்சங்களை வென்றெடுத்துள்ளது. தாளத்தின் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி பற்றி நோக்கும்போது கனேடிய மக்களை கவணத்தில் கொண்டு ‘உங்கள் விருப்பம்” தொடர்ந்து உலகமக்களின் உணர்வுகளோடு “சுவாசமே” நிகழ்ச்சி புலரும் பொழுதை வரவேற்கிறது “உதயம் வருகிறது” நிகழ்ச்சி.

“தேனருவி”யில் மனது மறக்காத பாடல்களை வழங்க மறப்பதில்லை. வாழ்கைக்கு வழிவேண்டுமா? கேட்கவேண்டும் “விருந்து வேளை” அதனைத் தொடர;ந்து “இன்றைய பாரதம்”; நிகழ்ச்சி. இடைக்காலப்பாடல்களை இடைவிடாது இசைக்கும் “மௌணராகம்” இவை தாளம் சர்வதேச வானொலயின் இணையத்தில் ஒலிப்பவை.

தாளத்தின் மற்றுமொரு சாதனையாய் இரவு நேரத்தில் இலங்கை மக்களோடு இணைகரம் சேர;ந்து 93.6 பண்பலையில் இரவு 9.30 மணி தொடக்கம் 11.00 மணிவரை “போடு தாளம் போடு” நிகழ்ச்சி தொகுப்பதே அருமை புதிய பாடல்களோடு சுவாரஸ்யமான, கலகலப்பான நிகழ்ச்சியாக ஏராளமான நேயர்களை தன்வசப்படுத்தியது “போடு தாளம் போடு”.

11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை இதயங்களின் உணர்வுகளை ஸ்வரக்கோவையாய் உணர்வலையில் தாலாட்டும் “இதயதாளம்” நிகழ்ச்சியின் இரகசியம் படைப்பவன் குரல் என்கிறது பிந்திய செய்தி. நள்ளிரவு நேரத்திலும் உறவுகள் இணைந்து குதூகலிக்கும் “குதூகல நேரம்” 12.00 மணிமுதல் 2.00 மணிவரை உங்கள் விருப்பப்பாடல்களை கேட்க அட்டகாசமாக சிரிப்பொலிக்கு குறைவில்லாமல் தொகுத்தளிப்பது வழமை. தொடர்ந்து வரும் “விழிமூடா செவியோடு” கண்கள் மூடினாலும் காதோரம் 2.00 மணிமுதல் 4.00 மணிவரை நிசிப்பொழுதிலும் சுமைகளை சுகமாக்கி இசைமீட்டும் தன்மை இனிமை. காலை நேரக் கதிரவனை புத்தம்புதிய இசைக் கோலத்தில் வரவேற்று பூமித்தாயை ஆதரிக்கும் அன்னை பூமிக்கு ஆராதனை அன்றைய நாளையும் சிறப்புக்களையும் சேர்க்கும் போது இனிய வாழ்த்துக்களும் பரிமாறும் நேரம்.

வார இறுதிநாட்களில் மத்தாப்பூ புதுமலர்கள் திரைவிமர்சனம் ஹொலிவூட் அரசியல் ஆய்வரங்கம் வழி 15 ஆகிய நிகழ்ச்சியாக அமைகிறது.

தாளத்தின் செய்திப் பிரிவு

தாளத்தின் வெற்றிகரமான பயணத்தில் தாளத்தின் செய்திப்பிரிவு பற்றியும் குறிப்பிடல் வேண்டும். சிக்கலான சூழ்நிலையிலும் சாதுரியமாக துணிச்சலுடன் நடுநிலையாக செயற்பட்டு புலம்பெயர் நேயா்களின் எதிர்பாப்புக்கள் அறிந்து உண்மையான செய்திகளை எடுத்துச்செல்லும் தன்மை சிறப்பானது. ஏன்றுமில்லாதவாறு எட்டு பிரதான செய்திகளை வழங்கி தன் சேவையை தரப்படுத்தியுள்ளது.

பதித்து வந்த தடங்களோடும் இவ்வாண்டடிலும் பல வெற்றிகளை தன்வசமாக்கும் கனவுகளோடும் வெற்றிநடை போடுகிறது தாளம் வானொலி. உலகமக்களின் உறவுப்பாலமாய் தொடர்ந்தும் புரட்சிகளோடு சரித்திரம் படைக்கும் தாளத்தின் திடமான நம்பிக்கை பயணம் தொடர்கிறது.

தாளம் குழுவினரின் இந்த ஆண்டு புதிய எதிர்பார்ப்பாக இருப்பது இலங்கையில் 93.6 பண்பலையில் இரவில் ஒலிபரப்பாகும் தாளம் சேவை இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் 24 மணி நேரமும் ஒலிபரப்பாக வேண்டும் என்பதே.